செய்திகள்
மாணவர்கள்.

அறிவியல் மாநாடு - பள்ளி குழந்தைகளுக்கு அழைப்பு

Published On 2021-09-08 07:51 GMT   |   Update On 2021-09-08 07:51 GMT
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ஆண்டுதோறும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.
திருப்பூர்:

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்படும் 29-வது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி குழந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநாட்டின் திருப்பூர்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ஆண்டுதோறும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு ‘நிலைப்புறு வாழ்க்கைக்கான வடிவமைப்பு மேம்பாடு மற்றும் முன்மாதிரி’என்ற பொதுத் தலைப்பில் மாநாடு நடத்தப்படுகிறது.

இதில் 10 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளிக்கு நேரடியாகச் செல்லாத குழந்தைகள் மேற்கண்ட தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளலாம். 

இதில் அவர்கள் சார்ந்துள்ள உள்ளூர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு 2 மாத ஆய்வு செய்து அதன் அறிக்கையை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். 

இதில்10 வயது முதல் 14 வயதுக்குள் இருப்போர் இளநிலை, 14 வயது முதல் 17 வயது வரை முதுநிலை என இரு பிரிவுகள் உள்ளன. இதில் 2 மாணவர்கள் ஒரு வழிகாட்டி ஆசிரியருடன் குழுவாக ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, இதில் பங்கேற்க விரும்பும் அனைத்து வகை பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் 94430 - 24086, 99440 - 95433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News