வழிபாடு
கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தேர்.

42 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் திருவழுதீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

Published On 2022-03-28 04:52 GMT   |   Update On 2022-03-28 04:52 GMT
ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோவிலில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற வைகாசி மாதம் தேரோட்ட திருவிழாவும் நடக்கவுள்ளது. முன்னதாக வருகிற 15-ந் தேதி திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் திருவழுதீஸ்வரர்- பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் முன்னொரு காலத்தில் வைகாசி மாதம் தேரோட்ட திருவிழா நடத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் திருவிழா நடத்தப்படவில்லை.

இதனால் மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட தேர் நிலையிலேயே நின்றது. இதனைதொடர்ந்து கோவிலுக்கு புதிய தேர் தயார் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தனியார் அமைப்புகள் சார்பில் கோவிலுக்கு புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய தேர் அமைக்கப்பட்டது.

42 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற வைகாசி மாதம் தேரோட்ட திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. முன்னதாக வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.

எனவே ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News