செய்திகள்
கோவை சிந்தாமணி புதூரில் நடந்த கூட்டத்தில் கருணாஸ் எம்எல்ஏ பேசியபோது எடுத்த படம்

சசிகலாவை சந்தித்து பேசுவேன்- கருணாஸ் பேட்டி

Published On 2021-01-28 07:31 GMT   |   Update On 2021-01-28 07:31 GMT
சசிகலா சென்னை வந்த பின்பு மரியாதை நிமித்தமாக அவரை சந்திப்பேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
கோவை:

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேசிய தெய்வீக பிரசாரத்தை நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ.  சூலூர், பள்ளபாளையம், சிந்தாமணி புதூர் பகுதிகளில் தொடங்கி வைத்தார்.

அப்போது கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

1994-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது எங்கள் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து தேவர் இனம் என அரசாணை வெளியிட்டார். அதனை உடனே அமல்படுத்த வேண்டும். சசிகலா சென்னை வந்த பின்பு நிச்சயமாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை அழைப்பார். மரியாதை நிமித்தமாக அவரை சந்திப்பேன்.

ஜெயலலிதா தான் எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தவர். அதனால் தற்போதைய அ.தி.மு.க. அரசின் கூட்டணி தொடரும். முதல்-அமைச்சர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் உள்ளதால் எங்களை அழைக்கவில்லை. எங்களை மட்டுமல்ல மற்ற கூட்டணி கட்சிகளையும் அழைக்கவில்லை.

தி.மு.க. தலைவருக்கு வேல் பரிசாக கொடுக்கப்பட்டது தவறான விஷயம் அல்ல. விவசாயிகள் டிராக்டர் பேரணியில் மத்திய அரசுதான் சதி செய்து சீர்குலைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News