ஆட்டோமொபைல்
எலெக்ட்ரிக் கார்

விரைவில் இந்தியா வரும் புது எலெக்ட்ரிக் கார்கள்

Published On 2021-08-24 09:29 GMT   |   Update On 2021-08-24 09:29 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக இருக்கின்றன.


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள், எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய துவங்கி உள்ளனர். 

ஏற்கனவே டாடா நெக்சான் இ.வி. துவங்கி மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. என பல்வேறு எலெக்ட்ரிக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர பல்வேறு இதர எலெக்ட்ரிக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புது எலெக்ட்ரிக் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

டாடா அல்ட்ரோஸ் இ.வி. - 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரோஸ் இ.வி. மாடலில் நெக்சான் இ.வி.-யில் வழங்கப்பட்டதைவிட 40 சதவீதம் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மஹிந்திரா இ.கே.யு.வி.100 - இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இந்த மாடல் பெறும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் பேட்டரி, முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது. 



டெஸ்லா மாடல் 3
- அமெரிக்க எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரின் மாடல் 3 இந்தியாவில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் விலை ரூ. 55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

ஹூண்டாய் இ.வி. - ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட பிரத்யேக எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் மாடல் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

டாடா டிகோர் இ.வி. - டாடாவின் டிகோர் இ.வி. மாடல் சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதன் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

Tags:    

Similar News