இந்தியா
பண்டிட் பிர்ஜு மகராஜ்

விஸ்வரூபம் படத்துக்காக தேசிய விருது பெற்ற கதக் நடனக்கலைஞர் காலமானார்!

Published On 2022-01-17 02:59 GMT   |   Update On 2022-01-17 03:47 GMT
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள கதக் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்து தேசிய விருது பெற்றவர்.
புதுடெல்லி: 

இந்தியாவின் புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.

பண்டிட் பிர்ஜூ மகராஜ், டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். 

பிர்ஜு மகராஜ் தனது திறமைக்காக நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவர். இவர் ட்ரம்ஸ், தபாலா உள்ளிட்ட வாத்திய கருவியையும் வாசிக்கக் கூடியவர். தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாகப் பாடக்கூடியவர்.

பிர்ஜு மகராஜ் சிறந்த கதை சொல்லி ஆவார். வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாக கதையாக சொல்லக்கூடியவர். 



நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள கதக் பாடலான ‘உன்னை காணாத’ பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்றவர்.

பிர்ஜூ மகராஜின் தந்தை அச்சன் மகாராஜ், மாமன்மார்கள் சாம்பு மகாராஜ், லச்சு மகாராஜ் ஆகியோரும் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்கள் ஆவர்.
Tags:    

Similar News