ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ S 1000 R

ரூ. 17.90 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ S 1000 R இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-06-16 07:48 GMT   |   Update On 2021-06-16 07:48 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 S 1000 R மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 2021 பிஎம்டபிள்யூ S 1000 R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது பிஎம்டபிள்யூ S 1000 R விலை ரூ. 17.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு நாடு முழுக்க துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய சந்தையில் 2021 பிஎம்டபிள்யூ S 1000 R மோட்டார்சைக்கிள் - ஸ்டான்டர்டு, ப்ரோ மற்றும் எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 22.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



இதன் ஸ்டான்டர்டு மாடல் ரேசிங் ரெட் நிறத்திலும், ப்ரோ மாடல் ஹாகன்ஹெம் சில்வர் / மேட் காப்பர் நிறத்திலும், எம் ஸ்போர்ட் மாடல் லைட் புளூ, டார்க் புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

2021 பிஎம்டபிள்யூ S 1000 R மாடல் 998சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் என மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News