ஆன்மிகம்
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சத சண்டி யாகம்

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சத சண்டி யாகம்

Published On 2020-09-12 05:13 GMT   |   Update On 2020-09-12 05:13 GMT
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் 46 -வது ஆண்டாக நேற்று சத சண்டி யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் பக்தர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்ட வெக்காளியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஊரடங்கில் இருந்து வழங்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். கோவில் பிரகார மண்டபங்களில் திருப்பணி வேலைகள் நடைபெற இருப்பதால் இன்று முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெக்காளியம்மன் கோவிலில் 46 -வது ஆண்டாக நேற்று சத சண்டி யாகம் நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும் மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்புவதற்காக நடத்தப்பட்ட இந்த யாகத்தில் பக்தர்கள் சிலர் கலந்து கொண்டனர். காலை 7 மணி அளவில் தொடங்கிய இந்த யாகம் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.
Tags:    

Similar News