உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கடந்த ஆண்டு 46 ஆயிரம் பேருக்கு உதவிய 108 ஆம்புலன்சு சேவை

Published On 2022-01-12 06:37 GMT   |   Update On 2022-01-12 06:37 GMT
நெஞ்சுவலி, சுவாச பிரச்சினை தொடர்பாக 2,094 பேர் ஆம்புலன்சு சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகள் 32 உள்ளன. மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை முன்பு 4 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டுள்ளன. பிறந்தது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அவசர சிகிச்சையின்போது மருத்துவமனைக்கு அழைத்து வர 4 ஆம்புலன்சு கள் இயக்கத்தில் உள்ளன. 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மாவட்டத்தில் 46 ஆயிரத்து 144 பேருக்கு 108 ஆம்புலன்சு மூலம் சேவையாற்றப்பட்டுள்ளது. பிரசவத்துக்கு மட்டும் 11 ஆயிரத்து 198 பேர் அழைத்துவந்துள்ளனர். 

வரும் வழியிலேயே ஆம்புலன்சில் 25 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளன. 1,476 பேர் விஷம் குடித்து சிகிச்சைக்காக அழைத்துள்ளனர். தற்கொலைக்கு முயன்ற 381 பேரை மீட்டு உயிரை காத்துள்ளனர்.

நெஞ்சுவலி, சுவாச பிரச்சினை தொடர்பாக 2,094 பேர் ஆம்புலன்சு சேவையை பயன்படுத்தியுள்ளனர். உடல் உபாதை, வயிற்று வலி காரணமாக 2,618 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சிறு வாகன விபத்தில் சிக்கிய 8,396 பேரை மீட்டு சிகிச்சையில் சேர்த்துள்ளனர். பெரிய வாகன விபத்தில் இருந்து 2,225 பேர் அழைத்துள்ளனர். மொத்தம் 46 ஆயிரத்து 144 பேர் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News