ஆன்மிகம்
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2020-12-22 08:57 GMT   |   Update On 2020-12-22 08:57 GMT
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் இரவு ஆன்மிக நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது.
லால்குடியில் பிரசித்தி பெற்ற சப்தரிஷீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு ஸ்ரீசந்திரசேகரர் நடன மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல், திருநடன காட்சி, மாணிக்கவாசகர் புறப்பாடு மற்றும் மண்டகப்படி பூஜைகள் நடைபெறும். அதேபோல் தினமும் இரவு ஆன்மிக நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது.

வருகிற 29-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும், 30-ந்தேதி நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனம் நடராஜ பெருமான் திருவீதி உலா திருநடன காட்சிகள் நடைபெறுகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு உற்சவ ஏற்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் கோவில் உள்ளே நடைபெறும். விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் மாரியப்பன் தலைமையில் செயல் அதிகாரி மனோகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உள்பட கோவில் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News