ஆன்மிகம்
காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

Published On 2019-11-01 06:44 GMT   |   Update On 2019-11-01 06:44 GMT
காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.
* கம்பீரத் தோற்றம்
* தரமான பேச்சு
* வறுமை, குறை நீங்குதல்
* பாதுகாப்பு வட்டம்

* கண்ணில் அறிவு தெரிதல்
* அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்
* நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்
* அமைதியாய் இருப்பர்

* நற்செயல்களில் ஈடுபடுவர்
* காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
* வாழ்க்கையில் தடைகளை நீக்கும்

* மூளையை பிரகாசிக்கச் செய்யும்
* உள்ளுணர்வினை தெளி வாக்கும்
* உயர் உண்மைகள் தெரிய வரும்

* காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

* ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

* 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

* 22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

* 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

* 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

* இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.

* கிழக்கு முகமாக அமருங்கள்.

* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள். தியானமோ, மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர, பழக்கப்பட 90 நாட்கள் ஆகும். 120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.
Tags:    

Similar News