செய்திகள்
கூட்டத்தில் வெற்றிவேல் பேசிய காட்சி. அருகில் மாவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணன் உள்ளார்.

அப்பல்லோவில் ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது- வெற்றிவேல்

Published On 2019-09-19 05:45 GMT   |   Update On 2019-09-19 08:23 GMT
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் தன்னிடம் உள்ளது என்று வெற்றிவேல் பேசியுள்ளார்.
சென்னை:

வடசென்னை தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் யானைகவுனியில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளரும், வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-

இன்றைக்கு மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி மொழியை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அது தேவையற்ற செயல். வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருபவர்கள் தமிழை கற்றுக்கொண்டு வரவில்லை. எனவே அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநில மொழி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்து மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டு மக்களை நடுரோட்டில் நிறுத்தி வருகிறது மத்திய அரசு. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் அனைத்துமே மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டு கொண்டு வருகின்றன.

ஓட்டு எந்திரம் மூலம் பல்வேறு முறைகேடுகளை செய்து அவர்களுக்குத் தேவையானவர்களை தேர்வு செய்தனர்.

தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். மகனை வெற்றி பெற செய்தார்கள். ஓ.பி.எஸ். தர்மயுத்தம் என்ற ஒரு யுத்தத்தை தொடங்கினார். ஆனால் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.



ஆனால் என்னிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்கள் இருப்பது ஓ.பி.எஸ்.சுக்கு தெரியவில்லை. இன்னும் ஜெயலலிதா சாப்பிடுகின்ற ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும்போது வெளியிடுவேன்.

வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு இயந்திரம் முற்றிலுமாக நீக்கப்பட்டு ஓட்டுச்சீட்டு முறைதான் வரும். இதை எதிர்க்க தைரியமும் தெம்பும் சசிகலாவுக்கும், டி.டி.வி தினகரனுக்கும் மட்டும்தான் உண்டு வேறு யாருக்கும் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் இ.பி. பாண்டியன், ஜி. வெங்கடேசன், ஏ.சி. லோகு, அதிவீரராம பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் டி.வி. நாசர், டாக்டர் எஸ். சுரேஷ், கே. சந்தானம், ராஜ்குமார் பாண்டியன், வில்லியம் அலெக்சாண்டர், வி பாலாஜி, பி.சுகுமார், கே.முகமதுசித்திக், பெரியசாமி, எம்.அலியார், எஸ்.ஹேமமாலினி, டி.எஸ். சேகரன், ஆர்.பானுமதி, எஸ். கற்பகம், ஆப்பிள் பாபு, மாஸ்டர் ஆர்.ராஜா, இரமா முருகன், எம்.எல்.ஜெகன், டாக்டர் சி.பி.ராமஜெயம், எஸ்.காதர் மீரான்.

அன்னக்கிளி, ஏ. எஸ். ராஜசேகர் ஆர். சந்தியா, பி.எல். ரவி, பி. சரவணன்,ஜே. அப்துல்லா, மன்னடி எஸ். எம். ரஃபி, இ. பி.பி. சரவணன், எஸ். ஜோதி முருகன், இஸ்திரி பி.மோகன் பி.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News