உள்ளூர் செய்திகள்
கடலூரில் இருந்து புதுவைக்கு வரும் பயணிகளை முள்ளோடை நுழைவு வாயிலில் மருத்துவ குழுவினர் சோதனை செய்த காட்சி.

முள்ளோடை நுழைவு வாயிலில் புதுவை வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2022-01-11 08:45 GMT   |   Update On 2022-01-11 08:45 GMT
புதுவை முள்ளோடை நுழைவு வாயிலில் புதுவை வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
பாகூர்:

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டு  இருக்க வேண்டும், முக கவசம் முறையாக அணிந்திருக்க வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிருமாம்பாக்கத்தை அடுத்த முள்ளோடை நுழைவு வாயிலில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் (பொறுப்பு), பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் மற்றும் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் லோகேஷ், லோகநாதன்,  போலீஸ் உதவி சப்&இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் ஆகியோர்   தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடலூர்   மாவட்டத்தில் இருந்து புதுவை  நோக்கி வரும் இருசக்கர வாகனம், கார், பஸ் அனைத்தையும் நிறுத்தி பரிசோதனை செய்த பின்பு அனுப்பி  வைக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News