ஆன்மிகம்
திருப்பதி

திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆன்லைன் கல்யாண உற்சவத்தில் 8,330 பக்தர்கள் தரிசனம்

Published On 2020-09-11 04:32 GMT   |   Update On 2020-09-11 04:32 GMT
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் முன்பதிவு செய்து பங்கேற்பவர்கள் 2 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்த 90 நாட்களுக்குள் சாமி தரிசனத்துக்கான அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகள் கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதியில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையை மட்டும் ஆன்லைன் மூலம் தொடங்கியது. இந்தக் கல்யாண உற்சவத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பிரதாய உடை அணிந்து, அர்ச்சகர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி தங்கள் கோத்திரம், நட்சத்திரம் உள்ளிட்டவற்றை கூறி பங்குக் கொள்கிறார்கள். அதில் பங்குக் கொள்பவர்களுக்கு தேவஸ்தானம் மேல்துண்டு, ஜாக்கெட், மஞ்சள், குங்குமம், கற்கண்டு, அட்சதை ஆகியவற்றை தபால் வழியாக பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

கல்யாண உற்சவத்தில் முன்பதிவு செய்து பங்கேற்பவர்கள் 2 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்த 90 நாட்களுக்குள் சாமி தரிசனத்துக்கான அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு விருப்பப்பட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துக் கொள்ளலாம். இந்த உற்சவம் தொடங்கப்பட்ட ஒரு மாத காலத்தில் 8 ஆயிரத்து 330 பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News