லைஃப்ஸ்டைல்
ஆழ்ந்த சுவாச தியான பயிற்சி

உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க ஆழ்ந்த சுவாச தியான பயிற்சி

Published On 2021-01-21 02:15 GMT   |   Update On 2021-01-21 02:15 GMT
ஆழ்ந்த சுவாசம் என்பது பல நன்மைகளை உள்ளடக்கியது. உங்க உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க ஆழ்ந்த சுவாச தியான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
தியானம் என்பது மத ரீதியான பயிற்சி மட்டும் கிடையாது அது நம் உடல் ரீதியான ஆரோக்கியமான பயிற்சியும் கூட. ஆழ்ந்த சுவாசம் என்பது பல நன்மைகளை உள்ளடக்கியது. இந்த ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் நீங்கள் அமைதியாகவும் நேர்மறையாகவும் உணர முடியும். ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும் போது உங்க உடலானது புத்துணர்ச்சி அடைகிறது. எனவே தான் உங்க உடலை ஆரோக்கியமாக வைக்க ஆழ்ந்த சுவாச பயிற்சி அவசியம்.

முதலில் காற்றை உள்ளிழுத்து ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்
எதிர்மறை எண்ணங்களை உங்க மனதில் இருந்து வெளியேற்றி நேர்மறை எண்ணங்களை மனதில் வையுங்கள்.

நீங்கள் எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் போது நேர்மறை எண்ணங்களின் மீது உங்களால் கவனம் செலுத்த முடியும். இது உங்களை மகிழ்ச்சியாகவும் நேர்மையாகவும் உணர வைக்கும். நம்பிக்கையுடன் உங்க நாளை தொடங்குங்கள்.

ஆழ்ந்த சுவாசம் தியானம் செய்ய எளிதான வழியாகும். நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது இதைச் செய்து வரலாம். இத்தகைய சூழ்நிலையில் ஆழ்ந்த சுவாசம் உங்க மனதையும் உடலையும் அமைதிப்படுத்தவும் ஓய்வெடுக்கவும் உதவி செய்யும்.

உடலில் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. ஏனெனில் அதிகப்படியான ஹார்மோன் அளவு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

உடலின் மையத்தை வலுப்படுத்துகிறது, சுவாசத்தை உள்ளிழுக்கவும், வெளியே விடவும்.

உதரவிதானத்தை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உங்க நுரையீரலை பலப்படுத்த முடியும்.

எனவே உங்க உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க ஆழ்ந்த சுவாச தியான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News