செய்திகள்
புள்ளிமான்

விபத்தில் சிக்கும் புள்ளிமான்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2021-06-10 07:21 GMT   |   Update On 2021-06-10 11:36 GMT
மென்மையான, சாதுவான புள்ளிமான் தெருநாய்களின் ஆக்ரோஷமானவிரட்டலில் கூட மடிந்துவிடும்.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதுப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகளவு புள்ளிமான்கள் உள்ளன. உணவு, தண்ணீர் தேடி சாலைகளில் துள்ளி குதித்து ஓடும் மான்கள் சில நேரங்களில் மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களில் அடிபட்டு இறந்து போகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

மான்கள் இறப்புக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் திருப்பூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 

மென்மையான, சாதுவான புள்ளிமான் இனம், தெருநாய்களின் ஆக்ரோஷமான விரட்டலில் கூட மடிந்துவிடும்.சிறிய சப்தம், ஆபத்தோ ஏற்படுவதை உணர்ந்தால் அதன் இதய துடிப்பு எகிறும். 

எனவே மான்கள் வசிக்குமிடங்களில் தொட்டி அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். உணவு தேவையை பூர்த்தி செய்யும் தாவர, செடி, கொடி, புல் இனங்களை அதிகளவில் வளர்க்க வேண்டும். வேட்டை தடுப்புக்குழு, தனிப்படை, கிராம மக்களை ஒருங்கிணைத்து மான்களின் நடமாட்டம், அவற்றை பாதுகாப்பதற்கான யுக்தியை திட்டமாக வகுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News