உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் படுகாயம்

Published On 2022-01-15 08:06 GMT   |   Update On 2022-01-15 08:06 GMT
ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உசிலம்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்ற போலீஸ்காரர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அலங்காநல்லூர்:

பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகள் களமிறக்கப்பட்டன. இவற்றை பிடிக்க 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள் தாக்கியதில் வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

மதுரை சக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தபோது எதிர்பாராதவிதமாக காளை தாக்கியதில் அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதேபோல் மற்றொரு காளையின் உரிமையாளர் கோபிநாத் ஜல்லிக்கட்டுக்கு காளையை அழைத்து வந்தபோது அந்த பகுதியில் யாரோ பட்டாசு வெடித்தனர். இதனால் காளை மிரண்டு தாக்கியதில் கோபிநாத்துக்கு காயம் ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டை காண மோட்டார் சைக்கிளில் வந்த மருது என்பவரும் காளை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். இவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 மாடுபிடி வீரர்களும் 4 காளை உரிமையாளர்களும், 2 பார்வையாளர்களும் காயமடைந்துள்ளனர்.

இதேபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உசிலம்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்ற போலீஸ்காரர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News