ஆன்மிகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் புதிய தங்கத்தேர் செய்யும் பணி தொடங்கியது

வரதராஜ பெருமாள் கோவிலில் புதிய தங்கத்தேர் செய்யும் பணி தொடங்கியது

Published On 2020-12-11 07:56 GMT   |   Update On 2020-12-11 07:56 GMT
வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கத்தேர் செய்ய சிறப்பு பூஜை நடைபெற்றது.
வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவின்போது தேரோட்டம் நடைபெறும். முக்கிய திருவிழாவின்போது கோவில் உள்பிரகாரத்தில் தங்கத்தேர் இழுக்கவும், இதற்காக அத்தியூரான் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் புதிய தங்க தேர் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கோவில் வளாகத்தில் தங்கத்தேர் செய்ய சிறப்பு பூஜை நடைபெற்றது. தேர் செய்யும் பணியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். 25-வது பட்டம் ஸ்ரீசீனிவாச ராமானுஜ ஆச்சாரியார் சுவாமிகள் மங்களா சாசனம் செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அத்தியூரான் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள், கோவில் தனி அதிகாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News