செய்திகள்
அபராதம்

வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 3 பேருக்கு அபராதம்

Published On 2021-07-18 12:04 GMT   |   Update On 2021-07-18 12:04 GMT
வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கம்:

செங்கம் வனத்துறை அலுவலர்கள் பிஞ்சூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், செங்கத்தை அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 25), சரண்ராஜ் (26), பி.எல்.தண்டா பகுதியை சேர்ந்த பழனி (24) என்பதும், வன விலங்குகளை வேட்டையாட சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News