செய்திகள்
ரஜினிகாந்த்

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூலை 12-ம் தேதி சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

Published On 2021-07-10 18:16 GMT   |   Update On 2021-07-10 18:16 GMT
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்து வந்தார். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது என்றார்.

இந்நிலையில், வரும் 12-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

ரஜினி மக்கள் மன்ற செயல்பாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
Tags:    

Similar News