ஆட்டோமொபைல்
கெலியோஸ் ஹோப்

ரூ. 46 ஆயிரம் பட்ஜெட்டில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-03-27 08:50 GMT   |   Update On 2021-03-27 08:50 GMT
ஐஐடி டெல்லி துவங்கி இருக்கும் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.


ஐஐடி டெல்லியின் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஹோப் எனும் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் துவக்க விலை ரூ. 46,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



புதிய ஹோப் ஸ்கூட்டர் பயன்படுத்தினால் கிலோமீட்டருக்கு 20 பைசா மட்டுமே செலவாகும் என கெலியோஸ் மொபிலிட்டி தெரிவித்து உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்த ஓட்டுனர் உரிமம் அல்லது பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் 250 வாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லி-அயன் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் இருவித பேட்டரியை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதன் குறைந்த திறன் கொண்ட பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை செல்லும், அதிக திறனுள்ள பேட்டரி அதிகபட்சம் 75 கிலோமீட்டர் செல்லும்.

Tags:    

Similar News