செய்திகள்
விராட் கோலி

4 முதல் 5 வருட உழைப்பின் உச்சம், இன்றைய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: விராட் கோலி

Published On 2021-06-18 13:35 GMT   |   Update On 2021-06-18 13:35 GMT
நாங்கள் இறுதிப்போட்டியில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நாங்கள் எங்கள் இடத்தை சம்பாதித்தோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதி போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. மழைக்காரணமாக இன்னும் டாஸ் போடவில்லை. போட்டியின் முதல் செசன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இது ஒரு போட்டி அவ்வளவுதான். ஆனால் சற்று கூடுதல் மதிப்பு சேர்ந்துள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் இதே எண்ணத்துடன் எதிர்கொண்டு விளையாடியதால்தான், உயர்ந்த இடத்தில் இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட் உங்கள் மனநிலையையும் உங்கள் உறுதியையும் சோதிக்கிறது.

நாங்கள் இறுதிப்போட்டியில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நாங்கள் எங்கள் இடத்தை சம்பாதித்தோம், நாங்கள் இருக்கும் இடத்திற்கு சொந்தமானவர்கள் என்று நாங்கள் உணர்கிறோம். இது கடந்த 4 முதல் 5 வருட உழைப்பின் உச்சம். இங்கு ஓரளவிற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மிகப்பெரிய இறுதிப் போட்டி ரசிகர்கள் இல்லாமல் இருந்தால் ஏமாற்றமாக இருந்திருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News