செய்திகள்
கோப்புபடம்

புகார்களை விசாரிப்பதில் அலட்சியம்-தளி போலீசார் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

Published On 2021-10-03 07:24 GMT   |   Update On 2021-10-03 07:24 GMT
தளி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்கின்ற பொதுமக்களை போலீசார் அலைக்கழித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தளி காவல் நிலையம் உள்ளது. இங்கு புகார் மனுக்களை அளிக்க வருகின்ற பொதுமக்களை போலீசார் அலைக்கழித்து வருவதுடன் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கூறுகையில்,

தளி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்கின்ற பொதுமக்களை போலீசார் அலைக்கழித்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் மனுக்களை பெற்று அதன்மீது போலீசார் குறித்த காலத்தில் நடவடிக்கை எடுப்பதில்லை.மாறாக இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

சமாதானத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் உரிய நிவாரணம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் புகாரில் தெரிவிக்கப்பட்ட நபர்களால் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 

இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தளி போலீசார் மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே மாவட்ட காவல் நிர்வாகம் தளி காவல் சரக பகுதியில் ஆய்வு செய்வதுடன் பொதுமக்களை வேண்டுமென்றே அழைக்கழித்து வருகின்ற போலீசார் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News