உள்ளூர் செய்திகள்
பஸ் சிறைபிடிக்கப்பட்ட காட்சி.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்சை சிறை பிடித்த அதிகாரிகள்

Published On 2022-05-05 10:17 GMT   |   Update On 2022-05-05 10:17 GMT
சேலம் புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்சை அதிகாரிகள் சிறை பிடித்தனர்.
கருப்பூர்:

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து  கரூருக்கு இன்று காலை 8.30 மணி  அளவில்  ஒரு தனியார் பஸ் புறப்பட தயாராக நின்றது.    அந்த  பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில்   அந்த பஸ்சை  குறிப்பிட்ட நேரத்திற்கு எடுக்காமல்  2 நிமிடம் காலம் தாழ்த்தியதாக கூறி  அரசு போக்குவரத்துக்கழக  நேர  காப்பாளர் மற்றும் உதவி மேலாளர் பஸ்சை   சிறை பிடித்தனர். 

இதனால் அதிகாரிகளுக்கும் , தனியார் பஸ்  கண்டக்டர்களுக்கும்   கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அைர மணி நேரத்திற்கும் மேலாக பஸ்சை நிறுத்தி வைத்ததால்      பஸ் பயணிகள்,  அரசு பஸ்  நேர  காப்பாளர்  மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். 

மேலும் உங்கள் பிரச்சினை    காரணமாக நாங்கள் குறிப்பிட்ட   நேரத்திற்கு செல்ல முடியாம ல்பஸ்சை  நிறுத்தி விட்டீர்கள்.  இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு   நாங்கள் அலுவலகத்திற்கு  செல்ல முடியவில்லை என்று கூறி தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.   இதையடுத்து    மாற்று  அரசு  பஸ்   கொண்டு வரப்பட்டு  பயணிகளை  அந்த பஸ்சில் அதிகாரிகள்   அனுப்பி வைத்தனர்.

   2  நிமிடம் தாமதத்திற்கு அதிகாரிகள் ஒரு மணி நேரம்   தனியார் பஸ்சை  பிடித்து   வைத்த சம்பவம் அங்கு  பெரும்   பரபரப்பை ஏற்படுத்தியது .  இதனால் பஸ் பயணிகள்  கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 
Tags:    

Similar News