லைஃப்ஸ்டைல்
பல் முளைக்கும் குழந்தைகளுக்கு இந்த உணவுகளைக் கொடுப்பது நல்லது..

பல் முளைக்கும் குழந்தைகளுக்கு இந்த உணவுகளைக் கொடுப்பது நல்லது..

Published On 2020-07-24 04:48 GMT   |   Update On 2020-07-24 04:48 GMT
குழந்தைகளுக்கு 6 மாதத்திற்குப் பிறகு பல் முளைக்கத் துவங்கும். அப்போது அவர்களின் ஈறுகளை உறுதியாக்கும், பல் வளர்ச்சியை ஆரோக்கியமாக்கும் உணவுகளைக் கொடுத்தல் நல்லது.
குழந்தைகளுக்கு 6 மாதத்திற்குப் பிறகு பல் முளைக்கத் துவங்கும். அப்படி முளைக்கும் நேரத்தில் அவர்கள் கண்டதையும் வாயில் வைத்துக் கடிப்பார்கள். சில நேரங்களில் நம்மையே கடிக்கச் செய்வார்கள். அதற்குக் அவர்களின் பல் ஊறும் என்பார்கள். ஈறுகள் ஊறுவதாலும், ஒருவித வலி உண்டாவதாலும் எதையாவது கடித்து பற்களுக்கு அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

சில நேரங்களில் அந்த வலியால் ஓயாமல் அழுது கொண்டும் இருப்பார்கள். சிலர் இதற்காக ரப்பர் போன்ற பொருட்களை கடிக்க வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு பதிலாக அவர்களின் ஈறுகளை உறுதியாக்கும், பல் வளர்ச்சியை ஆரோக்கியமாக்கும் உணவுகளைக் கொடுத்தல் நல்லது.

கேரட்டை மென்று சாப்பிட அவர்களின் பல் ஊறுவதற்கு இதமாக இருக்கும். அதோடு கேரட்டின் இனிப்பு சுவையும் ஆரோக்கியமும் குழந்தைகளுக்கு கூடுதல் நன்மை.

பீட்ரூட்டையும் மெல்லிய துண்டாக நறுக்கிக் கொடுங்கள். அதை மென்று சாப்பிடுவதாலும் அவர்களின் ஈறுகளின் உறுதிக்கு நல்லது.

துண்டு சீஸைக் கொடுங்கள். அது அவர்களின் ஈறுகளில் உள்ள வலியைக் குறைக்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். மென்று சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

பயறு வகைகளை வேக வைத்துக் கொடுங்கள். இது அவர்களின் பற்கள் சீக்கிரம் முளைக்க உதவுமாம். ஈறுகளில் உண்டாகும் ஊறும் உணர்வு , வீக்கம் இருந்தாலும் சரியாகிவிடும்.

வாழைப்பழம் கால்சியம் சத்து கொண்டது. அதன் இனிப்பு சுவையில் ஒளிந்திருக்கும் சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் க்ளுக்டோஸ் போன்றவை பல் வளர்ச்சியை உறுதியாக்குகின்றன.

அவகேடோவும் கால்சியம் சத்து நிறைந்தது. மேலும் அதில் உள்ள வைட்டமின் ஏ பற்களுக்கு நல்லது. அதுமட்டுமன்றி அதைக் மென்று சாப்பிடுவதால் பற்களின் ஈறுகளுக்கு நல்லது.

ஆப்பிள் பல வகையான சத்துக்களை உள்ளடக்கியது. குறிப்பாக பற்களின் ஈறுகளுக்கு நல்லது. இதனால் பல் வலி, ஊறுதல் போன்றவை இருக்காது.

மாதுளை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. அதோடு உங்கள் குழந்தையின் பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நல்லது.

பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்து நிறைந்த பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை போன்ற உணவுகளைக் கொடுங்கள்.
Tags:    

Similar News