செய்திகள்
கோப்புப்படம்

8 மாதங்களுக்கு பிறகு கோவாவில் பள்ளிகள் திறப்பு

Published On 2020-11-21 22:56 GMT   |   Update On 2020-11-21 22:56 GMT
கோவாவில் கொரோனா தொற்று காரணமாக 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
பனாஜி:

கோவா மாநிலத்தில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கலந்து ஆலோசித்த பின், பள்ளிகளை திறக்கும் முடிவை கோவா கல்வித்துறை எடுத்தது.

முதல்கட்டமாக, 10, 12-வது படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், பாதி மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். மற்ற மாணவர்கள் அடுத்த வாரம் முதல் அழைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை, கைகளில் கிருமிநாசினி தெளித்தல், முக கவசம் அணிதல், வகுப்புகளில் சமூக இடைவெளி போன்ற, கொரோனாவுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை பொறுப்பையும் கவனிக்கும் முதல்-மந்திரி பிரமோத் சாவந்தும் இதை வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News