செய்திகள்
கைது

நெற்குன்றத்தில் குடோனில் பதுக்கிய 3½ டன் குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2019-11-22 09:26 GMT   |   Update On 2019-11-22 09:26 GMT
நெற்குன்றத்தில் குடோனில் பதுக்கிய 3½ டன் குட்கா பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

விருகம்பாக்கம், வடபழனி கோயம்பேடு ஆகிய பகுதிகளில் குட்கா பதுக்கி வைத்து சப்ளை செய்யப்பட்டு வருவதாக இணை கமி‌ஷனர் மகேஸ்வரிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை விருகம்பாக்கம் ஏ.வி. எம். தெருவில் கார் மற்றும் மினி வேனில் கடத்தி செல்லப்பட்ட 300கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்போது வாகனங்களில் இருந்த செல்வம், ராமமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள குடோனிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மொத்தம் 3½ டன் குட்கா மற்றும் புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். குடோனில் இருந்த அதே பகுதியை சேர்ந்த மகேசையும் கைது செய்தனர்.

கைதான 3 பேர்களிடமும் குட்கா பதுக்கலில் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து ஒரு கார், மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News