செய்திகள்
மோதல்

சாத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக-அமமுக.வினர் மோதல்

Published On 2021-05-02 08:13 GMT   |   Update On 2021-05-02 08:13 GMT
சாத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க-அ.ம.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சிவகாசி ஸ்ரீவித்யா கல்லூரியில் தனித்தனி அறைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைகை செல்வன் இன்று காலை வந்தார். அவர் தனது தொகுதி வாக்கு எண்ணும் அறைக்கு செல்வதற்கு பதில் சாத்தூர் தொகுதி வாக்குகள் எண்ணும் அறைக்கு தவறுதலாக வந்து விட்டார்.

இதற்கு அ.ம.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக அ.தி.மு.க.வினரும் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. இதில் அ.ம.மு.க. முகவரின் சட்டை கிழிந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர் வைகை செல்வனை போலீசார் பாதுகாப்பாக அருப்புக்கோட்டை தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

Tags:    

Similar News