உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம்

பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு

Published On 2022-01-11 08:37 GMT   |   Update On 2022-01-11 08:37 GMT
கம்பத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் கம்பம் நகராட்சி எரிவாயு தகன மேடை எதிரே அரசு டாஸ்மாக் கடை அமைப்பதற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் குற்றச்சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் தபால் அட்டைகளில் புகார் மனுக்களை எழுதி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட கலெக்டரும் இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிவு தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவ, மாணவிகள் தெரிவிக்கையில், புதிதாக அமையவிருக்கும் டாஸ்மாக் கடை அருகே 2 மேல்நிலைப்பள்ளிகள், சத்துணவுகூடம், மக்கள் குடியிருப்பு பகுதி ஆகியவை உள்ளன.

எனவே இங்கு அமைய உள்ள கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக முதல்வருக்கும் புகார் அளிக்க உள்ளோம் என்றனர்.
Tags:    

Similar News