லைஃப்ஸ்டைல்
ஓட்ஸ் வெஜிடபிள் அடை

ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து சத்தான அடை செய்யலாமா?

Published On 2020-07-04 05:53 GMT   |   Update On 2020-07-04 05:53 GMT
டயட்டில் இருப்பவர்கள் எப்போதும் ஓட்ஸை கஞ்சி செய்து சாப்பிடாமல் காய்கறிகள் சேர்த்து அடை போன்றும் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

துருவிய கேரட் - அரை கப்
கோஸ் - அரை கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஓட்ஸ் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துருவிய கேரட், கோஸ் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைத்து கொள்ளவும்.

ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

இதில் நார்ச் சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News