செய்திகள்
துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-08 06:21 GMT   |   Update On 2021-04-08 07:22 GMT
சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார்.
சென்னை:

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.

சென்னை கோட்டூர்பு ரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த துரைமுருகனுக்கு கடந்த 2 நாட்களாக சளி, இருமல் காணப்பட்டது. உடல் சோர்வாக இருந்ததால், பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். துரைமுருகன் ஏற்கனவே 2 முறை தடுப்பூசி போட்டுள்ளார். அப்படி இருந்தும் அவருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News