செய்திகள்
காலையில் எரியும் மின்விளக்குகள்.

காலையிலும் எரியும் மின்விளக்குகள்

Published On 2021-09-13 10:42 GMT   |   Update On 2021-09-13 10:42 GMT
பகல் நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதன் மூலம் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரண்மனைபுதூர் பகுதியில் ஏராளமான தெரு மின்விளக்குகள் உள்ளன. இந்த மின்விளக்குகள் மாலை 6 மணிக்கு போடப்பட்டு , மறுநாள் காலை 6 மணிக்கு அணைக்கப்படும். 

தானியங்கி மூலம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை 4  மின்விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் காலை நேரமும் தொடர்ந்து எரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்சாரம் விரையமாவதுடன் தெருவிளக்குகள் விரைவில் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில்:

தெருவிளக்குகள் இரவு பகல் பாராமல் எரிகின்றன. பகல் நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதன் மூலம் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக அரசிற்கு தான் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News