செய்திகள்
கோப்புபடம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Published On 2021-07-14 10:41 GMT   |   Update On 2021-07-14 11:26 GMT
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 தடவை அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓராண்டுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை. 



இந்த நிலையில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% ல் இருந்து 28% ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என்று மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்தார். 

Tags:    

Similar News