செய்திகள்
அமைச்சர் காமராஜ்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்- காமராஜ் அறிக்கை

Published On 2019-11-13 10:26 GMT   |   Update On 2019-11-13 10:26 GMT
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு அளிக்கலாம் என்று அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் கட்சியின் அனுமதி வேண்டி விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் நகரமன்ற தலைவர், நகரமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் திருவாரூரில் நடைபெறும் விருப்ப மனு வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விருப்ப மனு அளிக்கலாம்.

திருவாரூர் மல்லிகா மகாலில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (நவம்பர் 15 மற்றும் 16-ந் தேதிகள்) ஆகிய இரு தினங்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு வினியோகம் மற்றும் பெறுதல் நிகழ்வு நடைபெறும்.

இதனை அ.தி.மு.க.வினர் பெற்று தாங்கள் போட்டியிட விரும்பும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்போர் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணத்துடன் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அதன்படி நகரமன்ற தலைவர் பொறுப்புக்கு போட்டியிட விரும்புவோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ 10,000, நகரமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிட விரும்புவோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ 2,500, பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு ரூ 5 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பொறுப்புக்கு 2,500, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொறுப்புக்கு 5 ஆயிரம், ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 3 ஆயிரம் என விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி தங்களுடைய விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் இரா. காமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News