தொழில்நுட்பம்
கோடக் டிவி

குறைந்த விலையில் கோடக் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-08-05 08:31 GMT   |   Update On 2020-08-05 08:31 GMT
கோடக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.


கோடக் டிவி இந்தியா நிறுவனம் ஏழு டிவி வேரியண்ட்களை எக்ஸ்ப்ரோ மற்றும் சிஏ சீரிசில் வெளியிட்டு உள்ளது. இத்துடன் உத்திர பிரதேச மாநிலத்திலன் ஹபூர் பகுதியில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் டிவி உற்பத்தி ஆலைக்கென ரூ. 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கோடக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு டிவிக்கள் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இத்துடன் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. எக்ஸ்ப்ரோ வேரியண்ட்களில் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 குவாட்கோர் பிராசஸர், யுஎஸ்பி 2.0, ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி/சிஇசி மற்றும் ப்ளூடூத் 4.1 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.



கோடக் புதிய டிவி வேரியண்ட்கள் கிட்டத்தட்ட பெசல்கள் இல்லா வடிவமைப்பு கொண்டிருக்கின்றன. மேலும் இவை 24 வாட் சவுண்ட் அவுட்புட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் வழங்கப்படும் ரிமோட் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இதில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற சேவைகளை இயக்க பிரத்யேக பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் சிஏ சீரிஸ் 75 இன்ச் மாடலில் டால்பி விஷன், 500 நிட்ஸ் பிரைட்னஸ் பேனல் மற்றும் 30 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய கோடக் டிவிக்கள் விலை விவரம்:

- 32 இன்ச் ஹெச்டி 7எக்ஸ் ப்ரோ ரூ. 10,999
- 40 இன்ச் FHD 7எக்ஸ் ப்ரோ ரூ. 16,499
- 43 இன்ச் FHD 7எக்ஸ் ப்ரோ ரூ. 18,999
- 43 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 21,999
- 50 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 25,999
- 55 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 29,999
- 75 இன்ச் 4கே சிஏ சீரிஸ் ரூ. 99,999

புதிய கோடக் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் அமேசான் மற்றும்  ப்ளிப்கார்ட் தளங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 
Tags:    

Similar News