தொழில்நுட்பம்
ரியல்மி டீசர்

ரியல்மி டிவி மற்றும் ரியல்மி வாட்ச் இந்திய வெளியீட்டு தேதி

Published On 2020-05-15 06:31 GMT   |   Update On 2020-05-15 06:31 GMT
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி டிவி மற்றும் ரியல்மி வாட்ச் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



ரியல்மி பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ரியல்மி டிவி மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது ட்விட்டரில், புதிய சாதனங்கள் இந்தியாவில் மே 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் ரியல்மி பிராண்டு இந்தியாவின் பிரபல வாழ்வியல் சாதனங்களை விற்கும் பிராண்டாக உருவெடுக்கும் பயணத்தை துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.



இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இது 43 அங்குல அளவில் நெட்ஃப்ளிக்ஸ் வசதியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய ரியல்மி வாட்ச் சதுரங்க வடிவம் கொண்ட டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதில் 1.4 அங்குல டிஎஃப்டி எல்சிடி தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே 320x320 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் வலதுபுறத்தில் ஒற்றை பட்டன் வழங்கப்படும் என்றும் இதன் ரிஸ்ட் பேண்ட்களை கழற்றி மாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக இதய துடிப்பு சென்சார் இயங்கினாலும் இதில் வழங்கப்பட்டுள்ள 160 எம்ஏஹெச் பேட்டரி ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News