செய்திகள்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

புதுச்சேரி, கேரள மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது

Published On 2021-04-04 13:52 GMT   |   Update On 2021-04-04 13:52 GMT
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் நாளைமறுதினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன.

இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது.

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கியது, அன்றைய தினத்தில் இருந்தே கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



இன்று இரவு 7 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்திருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சரியாக 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

தொகுதிக்குள் தங்கியிருக்கும் வெளிநபர்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் வாக்குப்பதிவிற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர்.
Tags:    

Similar News