செய்திகள்
குமாரசாமி

கன்னடம் அழகற்ற மொழியா?: கூகுள் நிறுவனத்திற்கு குமாரசாமி கடும் கண்டனம்

Published On 2021-06-04 02:49 GMT   |   Update On 2021-06-04 02:49 GMT
மொழி விஷயத்தில் யாராக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதிலும் கன்னட மொழி விஷயத்தில் 2 மடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கூகுள் தேடலில் இந்தியாவில் அழகற்ற மொழி எது என்று கேட்டால், அது கன்னடம் என்று சொல்கிறது. முக்கியமான விஷயங்கள் கூகுள் ஏன் இவ்வளவு பொறுப்பு இல்லாமல் இருக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கன்னடர்களின் கடும் ஆக்ரோஷத்தை அடுத்து அந்த பக்கத்தை கூகுள் நீக்கியுள்ளது. எந்த மொழியாக இருந்தாலும் சரி, ஒரு மொழிக்கு எதிராக விரோதத்தை கட்டுப்படுத்துவது என்பது கூகுளுக்கு சாத்திமில்லையா?.

கன்னடம் மட்டுமின்றி எந்த மொழியும் அழகற்ற, மோசமான மொழி இல்லை. எல்லா மொழிகளும் அழகானதே. மொழி, உணர்வுகளுடன் தொடர்புடையது. மொழியை அவமதிப்பது பெரும் வருத்தத்திற்குரியது. அதனால் இந்த விஷயத்தில்
கூகுள்
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கன்னடத்தை அவமதித்த இணைய பக்கத்தை நீக்கி இருக்கலாம். ஆனால் கன்னடர்களுக்கு ஏற்பட்ட வலிக்கு என்ன நிவாரணம்?.

மொழி விஷயத்தில் யாராக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதிலும் கன்னட மொழி விஷயத்தில் 2 மடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் கன்னடர்களின் கோபம் தீவிரமாக அதிகரித்தது. இது சுனாமியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கன்னடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட மொழி.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News