செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

Published On 2021-07-27 05:15 GMT   |   Update On 2021-07-27 07:53 GMT
கடந்த சிலநாட்களாக கொரோனா தினசரி பாதிப்பில் கேரளா முதலிடத்தில் உள்ளது. நேற்று அங்கு 11,586 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரத்து 951 ஆக உயர்ந்தது.

சமீபகாலமாக நாள்தோறும் 17 லட்சத்திற்கும் மேல் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 25-ந் தேதி விடுமுறைநாளில் நாடு முழுவதும் 11,54,444 மாதிரிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்டது.

இதுவும் தினசரி பாதிப்பு இந்த அளவு குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. கடந்த சிலநாட்களாக கொரோனா தினசரி பாதிப்பில் கேரளா முதலிடத்தில் உள்ளது. நேற்று அங்கு 11,586 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் 4,877 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 135, ஒடிசாவில் 62, மகாராஷ்டிரத்தில் 53 பேர் உள்பட நேற்று 415 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,31,605, கர்நாடகாவில் 36,405, தமிழ்நாட்டில் 33,937, டெல்லியில் 25,044, உத்தரபிரதேசத்தில் 22,750 பேர் அடங்குவர்.

கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று 42,363 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 6 லட்சத்து 21 ஆயிரத்து 469 ஆக உயர்ந்தது.

அதேநேரம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4.11 லட்சத்தில் இருந்து தற்போது 3,98,100 ஆக குறைந்துள்ளது.



இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 66,03,112 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 44.19 கோடியாக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 17,20,110 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 45.91 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News