செய்திகள்
கற்பூரம்

ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வீட்டு வைத்தியம் - வைரலாகும் தகவல்களை நம்பாதீங்க

Published On 2021-04-23 05:00 GMT   |   Update On 2021-04-23 05:00 GMT
இந்தியாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்வதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


கற்பூரம், லவங்கம், ஓமம் உள்ளிட்டவைகளின் வாசத்தை நுகர்ந்தால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தான் இந்த தகவல் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் தகவலில், `கற்பூரம், லவங்கம் மற்றும் ஓமம் உள்ளிட்டவைகளை துணி ஒன்றில் கட்டி வைத்துக் கொண்டு பகல் மற்றும் இரவு என எப்போதும் நுகர்ந்து கொண்டே இருங்கள். இவ்வாறு செய்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். லடாக்கில் ஆக்சிஜன் அளவு குறையும் போது இதையே கொடுக்கிறார்கள். இது வீட்டு வைத்தியம். அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



இந்த தகவலை ஆய்வு செய்ததில், ஆக்சிஜன் அளவை அதிகரிக்க கற்பூரம், லங்கம் மற்றும் ஓமம் உதவும் என்பதை நிரூபிக்கும் தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. சுவாச பகுதியில் ஏற்படும் அடைப்பை சரி செய்வே லடாக்கில் கற்பூரம் கொடுக்க முக்கிய காரணம் ஆகும். 

கற்பூரம் சுவாச பகுதியில் உள்ள அடைப்பை நீக்க மட்டுமே செய்யும், அது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்காது என மருத்துவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் கற்பூரம் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதாக கூறி வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News