செய்திகள்
தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு

நாளை முதல் 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம்

Published On 2021-08-05 17:28 GMT   |   Update On 2021-08-05 17:28 GMT
தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அனைத்து பிரிவினரையும் திருப்திப்படுத்தும் என்றும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

நாளை முதல் தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 கோவில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’  என்ற பெயரில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தியிருப்பதாகவும், இது அனைத்து பிரிவினரையும் திருப்திப்படுத்தும், எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் கூறினார்.

சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யும் நடைமுறையும் தொடரும். விரும்புவோர் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Tags:    

Similar News