ஆன்மிகம்
கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடி, அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட போது எடுத்த படம்.

காரைக்கால் மஸ்தான்சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-03-24 03:06 GMT   |   Update On 2021-03-24 03:06 GMT
காரைக்காலில் நூற்றாண்டுகள் பழமையான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள பல்வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தார். இவர், இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். அதுபோல், காரைக்காலில் தங்கி இறைப்பணியாற்றிவந்தபோது, தமது 120-வது வயதில் காரைக்காலில் இயற்கை எய்தினார்.

அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாஹிப் வலியுல்ஹா தர்க்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு 198-வது கந்தூரி விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியானது, அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதத்தில், மாலை 3 மணிக்கு பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணி அளவில் கொடிமரத்தை சென்றடைந்தது. தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதிவுலா வரும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படும் நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். ஏப்ரல் 4-ந் தேதி இரவு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.
Tags:    

Similar News