செய்திகள்
ராமதாஸ்

தமிழகத்தில் மதுக்கடை திறக்க என்ன அவசரம்? ராமதாஸ் கேள்வி

Published On 2020-05-07 04:43 GMT   |   Update On 2020-05-07 04:43 GMT
கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்து விட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கொரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?.

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கேரள அரசு தடை விதித்திருக்கிறது. கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்து விட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா?”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News