தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 49 சலுகை நீக்கப்பட்டு ரூ. 79 சலுகை அறிமுகம்

Published On 2019-12-12 05:29 GMT   |   Update On 2019-12-12 05:29 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 49 விலையில் வழங்கி வந்த சலுகையை நீக்கி ரூ. 79 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகை கட்டணம் சமீபத்தில் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முன்னதாக தங்களது சலுகை கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் துவக்க சலுகை ரூ. 49 இல் இருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய ரூ. 75 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, மொத்தமாக 50 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இச்சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எம்பி அதிவேக டேட்டா கிடைக்கும்.

இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்பு விடுக்க 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோ – ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ரூ. 75 சலுகை தவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 125, ரூ. 155 மற்றும் ரூ. 185 விலை சலுகைகளையும் வழங்கி வருகிறது. 



அதன்படி ரூ. 125 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 500 எம்பி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் முந்தைய ரூ. 75 சலுகையை போன்று ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். ஜியோ – ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

ரூ. 155 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் ஜியோ – ஜியோ அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

இறுதியில் ரூ. 185 ஜியோபோன் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டாவும், ரூ. 155 சலுகையை போன்று தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் ஜியோ – ஜியோ அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News