செய்திகள்

ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்

Published On 2019-04-18 09:20 GMT   |   Update On 2019-04-18 09:20 GMT
ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் இத்தேர்தலில் மோடி மிகப்பெரும் சரிவை சந்திப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். #SharadPawar #PMModi
மும்பை:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பினார். அப்போது குஜராத்தில் ஏற்பட்டதை போன்ற வளர்ச்சியை உருவாக்க போவதாக ஒரு மாதிரி திட்டத்தை நாட்டு மக்கள் முன் நரேந்திரமோடி முன்வைத்தார்.

ஆனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. புதிய வேலைவாய்ப்புக்கான சாத்திய கூறுகளோ வாய்ப்புகளோ இல்லை. இந்த பாதிப்பு இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வாக்காளர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

எனவே, அதற்கான விலையை பிரதமர் மோடி இந்த தேர்தலில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இத்தேர்தலில் அவர் மிகப்பெரும் சரிவை சந்திப்பார்.

ஆனால் அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், நாட்டின் பொது வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் படுதோல்வி அடைந்தது.

ஜி.எஸ்.டி. அமல்படுத்துதல் மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் மோடி எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

அது இளம் தலைமுறையினரை வசீகரித்தது. மோடி தலைமையிலான பாஜனதா ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்த்தனர்.

அவரால் ராணுவ வீரர்களின் பெயரை வைத்து தேர்தலில் ஓட்டு பெற முடியாது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு குறைந்தது 100 இடங்களே கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #SharadPawar #PMModi
Tags:    

Similar News