இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால்

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சார கட்டணத்தில் மானியம்: கெஜ்ரிவால்

Published On 2022-05-06 03:41 GMT   |   Update On 2022-05-06 03:41 GMT
மின்சார கட்டணத்திற்கான மானியத்தை தொடர விரும்புகிறீர்களா என்று குடிமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், இது தொடர்பான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி :

தலைநகர் டெல்லியில் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் அரசாங்கத்தின் நிதி உதவியை பெறும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், டெல்லியை தொழில் முனைவோருக்கான தலைநகரமாக மாற்றுவதே ஆம் ஆத்மி அரசின் லட்சியம் என குறிப்பிட்டார்.

மேலும் டெல்லியில் தற்போது குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெறுகின்ற வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போது மின் நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.800 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை தொடர விரும்புகிறீர்களா என்று குடிமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், இது தொடர்பான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இதன்படி, மின்சார கட்டண மானியத்தை பெற விரும்பும் நுகர்வோருக்கு மட்டுமே, வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல், மானியம் வழங்கப்படும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News