ஆன்மிகம்
முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-11-15 04:57 GMT   |   Update On 2021-11-15 04:57 GMT
பழனியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயில் தாக்கம் இன்றி பக்தர்கள் ஆனந்தமுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் குடும்பத்துடன் வந்தவர்கள் ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை மற்றும் முகூர்த்தநாள் என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.

அதிகாலை முதலே அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்ததை பார்க்க முடிந்தது.

இதேபோல் படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட தரிசன வழிகளிலும், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பழனியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயில் தாக்கம் இன்றி பக்தர்கள் ஆனந்தமுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் குடும்பத்துடன் வந்தவர்கள் ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News