ஆன்மிகம்
நவராத்திரி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா

Published On 2020-10-19 02:44 GMT   |   Update On 2020-10-19 02:44 GMT
கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூன்று சக்தி அம்சங்களிடம் வழிபாடு நடத்துவதே நவராத்திரியின் சிறப்பு அம்சம் ஆகும்.
கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூன்று சக்தி அம்சங்களிடம் வழிபாடு நடத்துவதே நவராத்திரியின் சிறப்பு அம்சம் ஆகும். இத்தகைய நவராத்திரி விழா கோவில்கள் மற்றும் அவரவர் இல்லங்களில் கொலு வைத்து நடத்துவது வழக்கம்.

அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது இதையொட்டி மாலை 5 மணி அளவில் காப்புக்கட்டுதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு ராஜ அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நவராத்திரி விழாவில் அம்மனுக்கு நாள்தோறும் புன்னை மர கிருஷ்ணன், சிவபூஜை, கஜலட்சுமி, ராஜராஜேஸ்வரி, துர்க்கை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து வருகிற 26-ந்தேதி விஜயதசமி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இதையொட்டி அம்மன் குதிரை வாகனத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக் கிறது. அதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி தொடக்கவிழாவையொட்டி நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அதேபோன்று திண்டுக்கல்லில் உள்ள கோவில்கள் மற்றும் அவரவர் இல்லங்களில் ஏராளமானவர்கள் நவராத்திரி விழா தொடங்கினர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், கொலு வைத்தல் உள்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
Tags:    

Similar News