உள்ளூர் செய்திகள்
வருண்சிங்.

80 சதவீத தீக்காயங்கள்- விபத்தில் உயிர் தப்பிய கேப்டனுக்கு தீவிர சிகிச்சை

Published On 2021-12-09 05:05 GMT   |   Update On 2021-12-09 06:02 GMT
வருண்சிங், கடந்த ஆண்டு தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண்சிங், விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
குன்னூர்:

குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தில் அவர்களுடன் பயணித்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண்சிங் மட்டும் உயிர் தப்பினார். அவர் 80 சதவீத தீக்காயங்களுடன் குன்னூர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வரும் பட்சத்தில் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். இதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கோவையில் இருந்து சென்ற சிறப்பு மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வருண்சிங், கடந்த ஆண்டு தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண்சிங், விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். அவரது தீர செயலுக்காக இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு சவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


Tags:    

Similar News