உள்ளூர் செய்திகள்
சஞ்சீவன ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரத்தை ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் சேர்மன் கே.சீனிவாச

சஞ்சீவன ஆஞ்சநேயர் கோவிலுக்கு தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரம்

Published On 2022-01-11 10:04 GMT   |   Update On 2022-01-11 10:04 GMT
ஸ்ரீரங்கம் மேலூர் சஞ்சீவன ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக தண்ணீர் சுத்திரிக்கும் எந்திரம் வழங்கப்பட்டது.
திருச்சி:

தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சியிக்கு ஸ்ரீரங்கம் கோவில், காவிரி ஆறு, மலைக்கோட்டை என பல்வேறு அடையாளம் இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது 37 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலும் இணைந்தள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 37 அடி உயர ஸ்ரீசஞ்ஜீவன ஆஞ்சனேயர் சிலையையும் இணைத்துக் கொள்ளலாம். பிரசித்தி பெற்ற நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும், சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும் ஆஞ்சனேயருக்கு சிலைகள் அமைத்துள்ள நிலையில், தமிழகத்திலேயே மிக உயரமான அளவில் 37 அடி உயரத்தில் ஸ்ரீரங்கத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைந்திருக்கிறது.

சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள்.

இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயனடையும் வகையில் தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரத்தை ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் சேர்மன் கே.சீனிவாசன் முன்னிலையில், ரோட்டரி சங்கம் திருச்சிராப்பள்ளி முன்னாள் செயலாளர் ராஜாராம், ஆலய டிரஸ்டி வாசுதேவனிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் ரோட்டேரியன் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News