தொழில்நுட்பம்
ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன்

விரைவில் அறிமுகமாகவுள்ள ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் -சிறப்பம்சங்கள் என்னென்ன?

Published On 2019-09-05 07:23 GMT   |   Update On 2019-09-05 07:23 GMT
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி எக்ஸ்டி ஸ்மாட்ர்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ளது.
ரியல்மி நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டது. இந்த நிறுவனம் நேரடியாக சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமியுடன் மோதுகிறது. சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

4ஜிபி மற்றும் 64ஜிபி, 6ஜிபி மற்றும் 64ஜிபி, மற்றும் 8ஜிபி மற்றும் 128ஜிபி என மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள்  நீல நிறத்தில் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்திலும் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 8ஜிபி அளவு வரையிலான ரேம், 128ஜிபி வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் அமோல்ட் திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.



இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை மையப்படுத்தி கலர் ஓ.எஸ் 6 அமைப்பைக் கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொருத்தவரை இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை  இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதோடு, 4,000எம்.ஏ.ஹெச். பேட்டரி,  20டபுள்யூ, விஓஓசி 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜர் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் சீனாவிலும் அறிமுகமாகாத நிலையில், ரியல்மி எக்ஸ்டியின் விலை மர்மாகவே உள்ளது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4 பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட விலையிலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News